கொப்பலா பொம்மை தயாரிப்பு மண்டலம் மூலம் 40,000 பேருக்கு வேலை: கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் உள்ள கொப்பலாவில் பொம்மை தொழிற்சாலை மண்டத்தில் அன்னிய முதலீசுகளை ஈர்க்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 30, 2020, 05:26 PM IST
  • கர்நாடகா இந்தியாவில் உள்ள பொம்மைகளுக்கான மூன்றாவது பெரிய சந்தையாகும்
  • கர்நாடகாவில் பொம்மைகள் தயாரிப்பு மண்டலத்தில், உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • கொப்பலாவில் வரவிருக்கும் இந்த தொழிற்பூங்கா, மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சில பகுதிகளில் வேலைவாய்ப்புகளை கொண்டுவருவதற்கான முயற்சியாகும்.
கொப்பலா பொம்மை தயாரிப்பு மண்டலம் மூலம் 40,000 பேருக்கு வேலை: கர்நாடக முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை, மன் கீ பாத் நிகழ்ச்சியில், மக்களுடன் உரையாடும் போது, இந்தியா உலகின் பொம்மை உற்பத்தி மையமாக மாற வேண்டும் என குறிப்பிட்டார். 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பி.எஸ். யடியூரப்பா, பெங்களூரிலிருந்து 351 கி.மீ தூரத்தில் உள்ள கொப்பாலாவில் பொம்மை தயாரிப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் அதன் மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த தொழில் மண்டலம், ரூ .5,000 கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் யடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வகையில், இந்தியாவில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார் என்றும், அந்த வகையில் கொப்பலா இந்தியாவின் முதல் பொம்மை உற்பத்தி மையமாக இருக்கும் எனவும் கூறினார். 4000 ஏக்கர் நிலப்பரப்பில், உருவாக்கப்படும் பொம்மை தயாரிப்பு மண்டலம் மூலம் 5 ஆண்டுகளில் 40,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்று யெடியூரப்பா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பொம்மைகள் தயாரிப்பு மண்டலத்தை அமைப்பதற்காக உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ALSO READ | இந்திய பண்பாட்டை வெளிப்படுத்தும் பொம்மைகள் தயாரிக்க பிரதமர் வலியுறுத்தல்..!!

கோவிட் -19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், தூண்டப்பட்ட பூட்டுதல், வெள்ளம் ஆகியவற்றால்  மற்ற எல்லா மாநிலஙக்ளை போலவே பாதிக்கப்பட்டுள்ள, கர்நாடகா, மாநிலத்தில் உள்ள நெருக்கடி நிலையை போக்க முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது

கொப்பலாவில் வரவிருக்கும் இந்த தொழிற்பூங்கா, மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சில பகுதிகளில் வேலைவாய்ப்புகளை கொண்டுவருவதற்கான முயற்சியாகும்.

ALSO READ | இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா?

கர்நாடகா இந்தியாவில் பொம்மைகளுக்கான மூன்றாவது பெரிய சந்தையாகும் என அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 16 கோடி அமெரிக்க டாலர் (1200 கோடி ரூபாய்) . அதாவது தேசிய சந்தையில் 9.1% ஆகும். 2010-17  ஆண்டுகளில் மாநிலத்தின் பொம்மைத் தொழில் சராசரியாக 18% வளர்ச்சியடைந்துள்ளது, மேலும் 2023 ஆம் ஆண்டில் 31 கோடி டாலர்களை  (சுமார் 2,325 கோடி ரூபாய்)எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News