கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதன் காரணமாக, தெற்கு ரயில்வேக்கு அதன் சேவைகளை முழுமையாக மீண்டும் தொடக்க உத்தரவிடப்படமாட்டாது என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த பொது நலன் மனுவை தள்ளுபடி செய்யும் போது இவ்வாறு கூறினார்.
தொற்று பாதிப்புகளின் (Corona Virus) எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக, வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராவது என்ற வழக்கமான நடவடிக்கையை மீண்டும் தொடக்கும் முடிவை உயர் நீதிமன்றமே தள்ளி வைத்துள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
விமான சேவைகள் மற்றும் திரையரங்குகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரயில்களை முழுமையாக இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
தமிழகத்தில் திங்களன்று 836 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இப்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 8.60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 8.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாநிலத்தில் பரிசோதனை செய்பவர்களில் தொற்று பாதிப்பு உறுதிய்யாகும் விகிதம் 1% க்கும் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது இந்த அளவு 1.2% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் பரிசோதிப்பவர்களில், தொற்று உறுதியாகும் விகிதம் 2% ஐ தாண்டியுள்ளது. சராசரி தினசரி 65,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
ALSO READ | Oxford-AstraZeneca கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா.. எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR