தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... தலைமை செயலர் நடத்திய முக்கிய ஆலோசனை..!!

கோவிட் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கும், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2021, 06:00 PM IST
  • பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளிலும் மாஸ்குகள் அணிதல் மற்றும் சமூக இடைவெளிவிதிமுறைகள் மீறப்படுகிறது.
  • மாஸ்குகள் அணிதல் மற்றும் சமூக இடைவெளிவிதிமுறைகள் மீறப்படுவது தான் காரணம்
  • விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... தலைமை செயலர் நடத்திய முக்கிய ஆலோசனை..!! title=

தமிழ்நாட்டில் சட்ட பேரவை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் கோவிட் -19  தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து தமிழக தலைமைச் செயலர் நிலைமையை மதிப்பிட்டு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, கோவிட்-19  தடுப்பு பரவல் தடுப்பு முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். 

தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரம், காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அதில், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளிலும் மாஸ்குகள் அணிதல் மற்றும்  சமூக இடைவெளிவிதிமுறைகள் மீறப்படுவது தான் காரணம் என கூறப்பட்டது

ALSO READ | Oxford-AstraZeneca கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா.. எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன..!!!

கோவிட்  (COVID) விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கும், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

வங்கிகள், அரசு மற்றும் தனியார் இடங்கள், தொழிற்சாலைகள், திருமண அரங்குகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா இடங்கள் போன்றவற்றில் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திங்களன்று 836 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இப்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 8.60  லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 8.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாநிலத்தில் பரிசோதனை செய்பவர்களில் தொற்று பாதிப்பு உறுதிய்யாகும் விகிதம் 1% க்கும் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது இந்த அளவு 1.2% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் பரிசோதிப்பவர்களில், தொற்று உறுதியாகும் விகிதம் 2% ஐ தாண்டியுள்ளது. சராசரி தினசரி 65,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News