Phonepe: இனி UPI பேமெண்டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!

Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 10:03 PM IST
  • செப்டம்பர் 2022இல் இந்திய ரிசர்வ் வங்கி UPI Lite சேவை தொடங்கிவைத்தது.
  • இதே வசதியை பேடிஎம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
  • அன்றாட செலவுகளுக்கு எளிதாக இதனை பயன்படுத்தலாம்.
Phonepe: இனி UPI பேமெண்டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்! title=

Phonepe UPI Lite: டிஜிட்டல் பேமெண்ட் தளமான போன்பே செயலியை பயன்படுத்துபவர்களுக்கு UPI பணம் செலுத்துவது இன்னும் எளிதாகிவிட்டது. அதாவது, போன்பேவின் UPI லைட் அம்சத்தை அதன் செயில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்போது பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். சமீபத்தில், டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனமும் இந்த வசதியைத் தொடங்கியுள்ளது.

போன்பேவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் சாரி கூறுகையில்,"UPI Lite ஆனது, UPI ஸ்டாக் வழங்கலின் ஒரு முக்கிய பகுதியாகும். இது பயனர்களின் டிஜிட்டல் பேமெண்ட் அனுபவத்தை அடிக்கடி மற்றும் குறைந்த அளவிலான செலவுகளுக்கு மேம்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது, ஒட்டுமொத்த UPI கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவு சிறிய பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளன. மேலும் UPI லைட் தற்போதுள்ள UPI உள்கட்டமைப்பில் அழுத்தம் கொடுக்காமல் அவற்றை வேகமாகவும் வசதியாகவும் மாற்றும்.

மேலும் படிக்க | ரயில்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாமா... விதிகள் சொல்வது என்ன?

UPI லைட் அம்சத்தின் அம்சங்கள்

UPI Lite ஆனது செப்டம்பர் 2022இல் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சக்திகாந்த தாஸால் குறைந்த மதிப்புள்ள UPI பேமெண்ட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் செய்ய தொடங்கப்பட்டது. UPI லைட் மூலம், ஒரே கிளிக்கில் பல சிறிய தினசரி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்ய முடியும். UPI லைட் வாலட் பயனர்கள் ஒருமுறை ஏற்றினால், ரூ.200 வரை உடனடிப் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது.

ரூ.200 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு பின் (PIN) தேவையில்லை. இது பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் செய்யும். இதில், ஒரு முறை அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் வரை சேர்க்கலாம். 

போன்பேவில் UPI லைட் அம்சத்தை எவ்வாறு செயல்படுத்துவது?

- போன்பே செயலியை திறக்கவும்.
- பயன்பாட்டின் முகப்புத் திரையில், பயனர்கள் UPI லைட்டை இயக்குவதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள்.
- UPI லைட்டில் இணைக்கப்பட வேண்டிய வங்கிக் கணக்கைத் தொகையை உள்ளிட்டு பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- நீங்கள் UPI பின்னை உள்ளிட்டவுடன் UPI Lite கணக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க | UPI பணப்பரிவர்த்தனைக்கு வரி...? - பேடிஎம் கொடுத்த முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News