ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் சேவைகள் எளிமையாக கிடைக்கிறது. வங்கிச் சேவை முதல் வாக்காளர் அடையாள அட்டை வரை ஆதார் எண் இணைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், அரசு கொடுக்கும் சேவைகள் எளிமையாக கிடைக்கும் என்பது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதற்காக மக்கள் உடனடியாக ஆதார் அட்டையை அனைத்திலும் இணைத்துவிடுகின்றனர்.
அதேபோல், உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைந்திருந்தால், வீட்டில் இருந்தபடியே பேங்க் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி முதியோருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அவர்களால் அடிக்கடி வங்கிகளுக்கு சென்று கொண்டு இருக்க முடியாது. சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கி இருப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்யவும்
* வங்கிக் கணக்கை உங்கள் எண்ணுடன் இணைக்க 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்
* உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்கவும்
* தற்போது SMS மூலம் வங்கி இருப்பு தெரிவிக்கப்படும்.
மேலும் படிக்க | பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்! மின்சாரம் தயாரிப்பது எளிதாகிவிட்டது
மேலும் படிக்க | வெறும் 15 ஆயிரத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் வாங்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata