புதுடெல்லி: ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் சரக்கு சேவை தொடங்கப்பட்டது. Paradip Port இது ஒடிசாவின் தொழில்களுக்கான தளவாட செலவுகளை குறைக்க உதவும் என்று பாரதீப் போர்ட் டிரஸ்ட் (பி.டி.டி) (Paradip Port Trust (PTT)) தலைவர் ரிங்கேஷ் ராய் தெரிவித்தார். "இது ஒடிசா மற்றும் பாரதீப்பிற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். முதன்முறையாக, ஒரு வழக்கமான எக்ஸிம் சேவை பாரதீப்பில் இருந்து மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்கு தொடங்குகிறது.
"இந்த சேவை ஒடிசாவின் பெரும்பாலான தொழில்களுக்கான தளவாடச் செலவுகளைக் குறைக்கும். இப்போது, பெரும்பாலான சரக்குகள், ஒடிசாவிலிருந்து விசாகப்பட்டினம் அல்லது கொல்கத்தா துறைமுகங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன.
தற்போது பாரதீப் துறைமுகத்தில் இருந்தே சரக்குகள் கையாளப்படும் என்பதால் மாநிலத்திற்கு பல வகையில் பலன் கிடைக்கும்" என்று ரிங்கேஷ் ராய் கூறினார். "புதிதாக தொடங்கப்பட்ட சேவை ஒடிசாவில் உள்ள தொழில்களை ஊக்குவித்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்" என்று ராய் மேலும் கூறினார்.
Read Also | ஹாகியா சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்
பாரதீப் துறைமுகத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று தொடங்கப்படும் சரக்கு போக்குவரத்து சேவை, தேவைப்படும்போது வாராந்திர அல்லது இரு வார சேவையாக மாற்றப்படும்" என்றும் அவர் கூறினார். எக்ஸிம் சேவை பலப்படுத்தப்படும் என்றும் ஒடிசாவின் பல சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் பயனடையும் என்றும் கூறப்படுகிறது.
முதல் சேவையாக MV Danu Bhum என்ற கப்பல் (எம்.வி. தனு பூம்) என்ற கப்பல் சிங்கப்பூரிலிருந்து பாரதீப் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.