சென்னை: ஊதிய உயர்வு, பைக் டாக்சி தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோவை, திருச்சி, மதுரையில் இன்று போராட்டம் நடத்த ஒலா, ஊபர் ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஆப் அடிப்படையிலான கால்டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஓலா மற்றும் உபெர் போன்ற ஆன்லைன் ரைடு பிளாட்ஃபார்ம்களை இணைக்கும் (online ride hailing platforms) பெரும்பாலான ஓட்டுநர்கள், நேற்று (2023 அக்டோபர் 16) திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஓலா, ஊபர், போர்டர், ரெட் டாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக கமிஷன் எடுத்து கொள்வதாகவும், குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் குறைகூறி, பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் நேற்று (16.10.2023) முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த நிலையில், கார், ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் செயலி மூலம் புக்கிங் எடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி வாடகை அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் "சட்டவிரோதமாக செயல்படும்" சுங்கச்சாவடிகள் மற்றும் ரேபிடோ போன்ற பைக்-டாக்சி சேவைகள் தங்கள் வருவாயை பறித்துக் கொள்வதாக புகார் அளிக்கும் வண்டி ஓட்டுநர்கள், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஆப் அடிப்படையிலான கால்டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஓட்டுநர்கள் நகரில் போராட்டம் நடத்தினர்.
அக்ரிகேட்டர் சேவைகளை வழங்குவதற்கும், பைக் டாக்சிகளை தடை செய்வதற்கும், அனைத்து டாக்சிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கும் மாநில அரசு தனது சொந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று டாக்சி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (AIRTWF) மற்றும் தமிழ்நாடு உரிமை குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளன. ஏனென்றால், ஓலா மற்றும் உபெர் போன்ற ஆன்லைன் ரைடு பிளாட்ஃபார்ம் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவரையும் பாதிக்கிறது. இது கட்டணம் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும், ஓட்டுநர்களுக்கு சரியான ஊதியத்தை உறுதிப்படுத்த அரசு உதவ வேண்டும் என்று போராட்டாக்காரர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
ஓலா மற்றும் உபெர் போன்ற ஆன்லைன் ரைடு பிளாட்ஃபார்ம்கள் தொடர்பான இந்த வேலைநிறுத்தம் பயணிகளை பாதித்திருக்கிறது, வழக்கமாக ஆப்-அடிப்படையிலான ரைடு ஹெய்லர்களை வழக்கமாகச் சார்ந்திருப்பவர்கள், அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 70,000 ஆட்டோக்களும், 60,000 க்கும் மேற்பட்ட டாக்சிகளும் இயங்குவதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ரேபிடோ தொடர்பான சிக்கல்களும் போராட்டங்களும் கர்நாடகா மற்றும் டெல்லியில் அதிக அளவில் உள்ளது, ஆன்லைன் டாக்ஸி ஒருங்கிணைப்பாளர்கள், ஓலா மற்றும் உபெர் போன்ற ஆன்லைன் ரைடு ஹெயிலிங் பிளாட்ஃபார்ம்களைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பண்டிகை காலத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்தது! அதிர்ச்சியா இல்லை ஆறுதலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ