சமீபகாலமாக பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பலவிதமான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றது, அந்த வகையில் தற்போது பான் கார்டுதாரர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு எனப்படும் இந்த ஆவணம் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் பான் கார்டு தான் அவசியம் என்கிற நிலைமை ஆகிவிட்டதால், அந்த ஆவணத்தை நீங்கள் செல்லக்கூடிய எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வளவு முக்கியமான ஆவணத்தை நீங்கள் தவறாக எங்காவது தொலைந்துவிட்டால் பெரும் பின் விளைவுகளை நீங்கள் சந்திக்கும்படி ஆகிவிடும்.
ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவது போன்ற அனைத்து விதமான பரிவர்த்தனையையும் வருமான வரி ஆணையம் பான் கார்டை வைத்து தான் கண்காணிக்கிறது. நமது பான் கார்டை நாம் தவறவிட்டால் அதற்கு ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும். இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பவர் அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரித்துறையின் விதிப்படி, பான் கார்டை ரத்து செய்து தண்டனையாக அபராதம் விதிக்கும். இதுதவிர பான் எண்ணில் பிழை ஏற்பட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் மற்றும் இரண்டாவது பான் கார்டு உடனடியாக வருமான வரி துறைக்கு அனுப்பப்பட வேண்டும். தவறான பான் தகவலை வழங்கும் நபருக்கு வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும்.
மேலும் படிக்க | Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது! லட்சக்கணக்கானோர் ஜாலி
நீங்கள் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனடியாக கொடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் வருமான வரித்துறை சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் மூலமாகவும் பான் கார்டை திருப்பி கொடுக்கலாம்.
பான் கார்டை சரண்டர் செய்வதற்கான முறை:
1) தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான incometaxindia.gov.in என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2) 'புதிய பான் கார்டு/மாற்றத்திற்கான கோரிக்கை' அல்லது 'பான் தரவு திருத்தம்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3) படிவத்தை டவுன்லோடு செய்து அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, ஏதேனும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உடனடி பான் எண்ணைப் பெறுவதற்கான படிகள்:
1) முதலில் https://www.incometax.gov.in/iec/foportal. என்கிற வருமான வரியின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
2) இப்போது 'இன்ஸ்டன்ட் இ-பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
3) 'புதிய இ-பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
4) இப்போது உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
5) உங்கள் பான் எண் நினைவில் இல்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடலாம்.
6) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கவனமாகப் படித்துவிட்டு 'ஏற்றுக்கொள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
7) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி-யை உள்ளிட வேண்டும்.
8) அதிலுள்ள விவரங்களைப் படித்த பிறகு 'உறுதிப்படுத்தவும்' என்பதை க்ளிக் செய்யவும்.
9) இப்போது உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு PDF வடிவில் பான் அனுப்பப்படும்.
10) இதில் நீங்கள் 'இ-பான்' கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
உடனடி பான் கார்டைப் பெறுவதற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முகவரி ஆதாரம் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ