Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது! லட்சக்கணக்கானோர் ஜாலி

Old Pension Scheme Latest Update: 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் வகையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும்! இது எந்த மாநிலம் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 09:28 AM IST
  • இமாச்சல்பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டடம்
  • 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்
  • பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி உயர்வு
Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது! லட்சக்கணக்கானோர் ஜாலி title=

Old Pension Scheme: சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் இப்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள், மேலும் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநில தலைமைச் செயலர் பிரபோத் சக்சேனாவின் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இந்த முடிவை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அறிவிக்குமாறு நிதித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் 
அரசின் இந்த முடிவால் சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், காங்கிரஸ் ஆளும் அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீட்டெடுக்க ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க | Pongal Gift Hamper: பொங்கல் பரிசு பெற குவிந்த மக்கள்! இது திமுக உறுப்பினரின் பரிசு

பெண்களுக்கு மாதம் ₹1500 வழங்க முடிவு

இது தவிர, 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்கவும், ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கவும் அமைச்சரவையின் துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 2004 முதல், அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வருவார்கள்.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி, ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மாநிலங்களுக்கு பெரும் ஆபத்தானதாக மாறும் என்றும், பழைய ஓய்வுதிய முறையை அமல்படுத்துவது மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும், இதன் தொடர்ச்சியாக, அதிகரிக்கும் கடனையும், அதற்கான வட்டியையும் செலுத்த பணம் தட்டுப்பாடு ஆகும் என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது.

மாநிலங்களின் பொறுப்பை அதிகரிக்கும் ஓய்வூதியத் திட்டம்

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. இதன் காரணமாக, மாநில அளவில் நிதிச்சுமைக் கூடும். எதிர்காலத்திற்கான செலவினங்களை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும், என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.  

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News