ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்: ஆர்பிஐ வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ளுங்கள்

RBI Update: ஏடிஎம் -மில் இருந்து சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? இந்த நோட்டுகள் செல்லுபடியாகுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2023, 03:38 PM IST
  • வங்கிகள் நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது.
  • ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன?
  • இதற்கான செயல்முறை என்ன?
ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்: ஆர்பிஐ வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ளுங்கள் title=

RBI Update: யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்பின் வளர்ச்சிக்குப் பிறகு, முன்பை விட பணப் பரிவர்த்தனைகள் குறைந்திருந்தாலும், பல இடங்களில் பொருட்களை வாங்குவதற்கும் பரிவர்த்தனைகளுக்கும் இன்னும் ரொக்கமாக பணம் பயன்படுத்தப்படுகிறது. அன்றாட வாழ்க்கையின் பல பணிகளுக்கு பணம் தேவை. இந்த காலத்தில் பணத்தை எடுக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் மூலம் எளிதாகப் பணத்தைப் பெறலாம், ஆனால் சில சமயங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, ​​சில சிதைந்த சேதமடைந்த நோட்டுகள் கிடைக்கின்றன. அத்தகைய நேரங்களில் இவை செல்லுமா செல்லாதா என்ற சந்தேகமும் அச்சமும் நமக்கு ஏற்படக்கூடும். 

ஏடிஎம் -மில் (ATM) இருந்து சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? இந்த நோட்டுகள் செல்லுபடியாகுமா? அதிக அளவில் பணம் எடுக்கும்போது பெரும்பாலான நோட்டுகள் சிதைந்து இருந்தால் என்ன  செய்வது? இவை பலருக்கு உள்ள பொதுவான கேள்விகளாக உள்ளன. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) சில விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளை பற்றி தெரிந்துகொள்வோம். 

வங்கிகள் நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது

ஏடிஎம்மில் சிதைந்த நோட்டுகள் கிடைத்தால், எளிதாக வங்கிக்குச் சென்று அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது. அரசு அல்லது தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளும் சிதைந்த அல்லது அழுக்கு நோட்டுகளை (Currency) எந்தவித சிரமமும் இன்றி தங்கள் கிளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள்ளது. வங்கிகள் இந்த நோட்டுகளை மாற்ற மறுத்தால், அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | பெண்களுக்கான சேமிப்பு திட்டம்... வரி விலக்குடன் அசத்தலான வட்டி... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன?

ஏப்ரல் 2017 இல், ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதல்களில் வங்கிகள் கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது என கூறியது. ஏடிஎம் -மில் இருந்து கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்தால், அந்த நோட்டுகளை ஏடிஎம் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கு எடுத்துச் செல்லவும். அங்கு சென்ற பிறகு, ஒரு விண்ணப்பத்தில் பணம் எடுத்த தேதி, பணம் எடுத்த நேரம் மற்றும் எந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தீர்கள் என்று குறிப்பிட வேண்டும்.

இதற்கான செயல்முறை என்ன?

ஏடிஎம் -மில் இருந்து வழங்கப்பட்ட சீட்டின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சீட்டை வழங்கவில்லை என்றால், மொபைலில் பெறப்பட்ட பரிவர்த்தனை விவரங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் மூலம் சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். வங்கிகள் தவறான நோட்டுகளை மாற்ற மறுத்தால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது.

கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக கிடைக்கும் நோட்டின் மதிப்பு

கிழிந்த நோட்டை மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கிழிந்த நோட்டின் மதிப்பைப் பொறுத்தது. உதாரணமாக சில நாட்களுக்கு முன் வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டில் 88 சதுர சென்டிமீட்டர் பகுதி அப்படியே இருந்தால், ரூபாய் நோட்டின் முழு மதிப்பும் கிடைக்கும். ஆனால் 44 சதுர சென்டிமீட்டர் பகுதி மட்டுமே இருந்தால் பாதி மதிப்புதான் கிடைக்கும். கிழிந்த ரூ.200 நோட்டின் 78 சதுர சென்டிமீட்டர் பகுதி இருந்தால் முழுத் தொகை கிடைக்கும். 39 சதுர சென்டிமீட்டர் பகுதி இருந்தால் பாதி தொகைதான் கிடைக்கும். 

சிதைந்த நோட்டுகளை மாற்றும் முறை

துண்டுகளாக உள்ள நோட்டுகள் / மற்றும்/அல்லது அத்தியாவசியப் பகுதிகள் விடுபட்ட நோட்டுகளையும் மாற்றலாம். இருப்பினும், இந்த நோட்டுகளின் ரீபண்ட் மதிப்பு ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின்படி செலுத்தப்படுகிறது. அனைத்து பொதுத் துறை வங்கிக் கிளைகளிலும், அனைத்து தனியார் துறை வங்கிகளின் நாணயச் செஸ்ட் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் (RBI) அனைத்து வெளியீட்டு அலுவலகங்கலிலும் எந்தப் படிவத்தையும் பூர்த்தி செய்யாமல்,  இவற்றை மாற்றலாம்.

மேலும் படிக்க | ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியின் 5% டிஏ ஹைக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News