SEBI New Rules on Stock Market Trading Settlements : செபி தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, ப்ராப் மற்றும் கிளையன்ட் டிரேடிங்கிங்கிற்கான விதிமுறைகள் மாற்றப்படுகிறது. இது தொடர்பாக பேசிய செபி தலைவர் மதாபி பூரி புச், ப்ராப் டிரேடிங் மற்றும் கிளையன்ட் டிரேடிங் ஆகியவற்றின் நிகர தீர்வுக்கு பதிலாக, தனித்தனியான தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி, தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்ய பரிசீலித்து வருகிறது. ப்ராப் டிரேடிங் மற்றும் கிளையன்ட் டிரேடிங்கின் நிகர தீர்வு காரணமாக முறையான ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக SEBI நம்புகிறது. இதன் அடிப்படையில் இரண்டுக்குமான தீர்வுகளை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீர்வு உறுப்பினர் மட்டத்தில் நிகர தீர்வு காரணமாக, பல நேரங்களில் தரகரின் குறுகிய நிலை வாடிக்கையாளரின் நீண்ட நிலைக்கு எதிராக தீர்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக செபி ஒரு பணிக்குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைத்துவிட்டது. எனவே, தற்போது ப்ராப் டிரேடிங் மற்றும் கிளையன்ட் டிரேடிங்கின் நிகர தீர்வுகளை வெவ்வேறாக மாற்றுவது சரியாக இருக்கும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் மாற்றப்படுகிறது.
ப்ராப் டிரேடிங்கை தவறாகப் பயன்படுத்துவதை செபி கண்காணித்து வருவதாகவும், இது தரகு சமூகத்துடனும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் செபியின் தலைவர் மதாபி பூரி புச் (Madhabi Puri Buch) தெரிவித்தார்.
வாடிக்கையாளரின் நிதி மற்றும் பங்குகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான செபியின் முடிவு தொடர்பான முக்கிய அம்சங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.
மேலும் படிக்க | 2024 இல் வரவிருக்கும் எதிர்பார்க்கப்படும் நடுத்தர அளவிலான SUVகள்
தற்போதைய நிலை என்ன?
உறுப்பினர் மட்டத்தில் மட்டுமே நிகர தீர்வு இருப்பதால், முறையான ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முன்மொழிவு முன் வைக்கப்படுகிறது. பல சமயங்களில் ப்ரோக்கரின் வாடிக்கையாளர் நிலையில் இருந்து தீர்வு ஏற்படுகிறது.
ப்ரோக்கர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனி கணக்குகளை பராமரிக்க வேண்டும். தனி வங்கி கணக்கு, பூல் கணக்கு தொடங்கப்பட வேண்டும் என்பது சரியான தீர்வாக இருக்கும் என்று செபி முடிவெடுத்துள்ளது.
செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ஆகும். இந்திய அரசு 1988ஆம் ஆண்டு இந்த அமைப்பை உருவாக்கியது.
செபி அமைப்பின் முக்கியமான பணிகள்
செபியின் செயல்பாடுகள் என்பது, பாதுகாப்பு , ஒழுங்குமுறை செயல்பாடு வளர்ச்சியின் அடிப்படையிலானவை. முதலீட்டாளர் பாதுகாப்பு என்பது செபியின் முக்கியமான பணியாகும். வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துவது போன்ற பாதுகாப்புப் பணிகளை செபி பிரதானமாக செய்கிறது.
வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மோசடி நடைமுறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது செபியின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.. அண்டர்ரைட்டர்கள், தரகர்கள் போன்ற நிதி இடைத்தரகர்களுக்கான நடத்தை நெறிமுறையை உருவாக்குவதும் செபியின் பணியாகும். சட்ட விதிமுறைகளுக்கும் சுய ஒழுங்குமுறைக்கும் இடையே சமநிலையை பேணும் பணியையும் செபி அமைப்பு மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | 2024 பிப்ரவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ