புது டெல்லி: பங்கு சந்தை: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் பொருளாதாரம் சீர்குழைந்து உள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு உத்தரவால் வணிகங்கள் முடங்கி உள்ளன. மறுபக்கம் கொரோனாவால் உயிரிழப்பு என அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல நடவடிக்காய்களைநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில், இன்றைய பங்கு வணிகம் சற்று ஆறுதல் தரும் நிலையில் இருந்தது. அதாவது சென்செக்ஸ் 415.86 புள்ளிகள் அல்லது 1.33% உயர்ந்து 31743.08 ஆகவும், நிஃப்டி 127.90 புள்ளிகள் அல்லது 1.40% உயர்ந்து ஆகவும் 9282.30 இருந்தது.
இன்றைய பங்கு சந்தையில், சுமார் 1286 பங்குகள் முன்னேறியுள்ளன. ஆதில் 1076 பங்குகள் சரிந்தன. 180 பங்குகள் எந்தவித லாபமும், நஷ்டமும் இல்லாமல் அப்படியே இருந்தன.
இண்டஸ் இண்ட் வங்கி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின. என்டிபிசி, எச்.டி.எஃப்.சி வங்கி, எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டி லேப்ஸ் மற்றும் கிராசிம் ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.
அனைத்து துறை குறியீடுகளும் இன்று வங்கி, ஐடி, ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி தலைமையில் உயர்ந்தன.
உலகளாவிய சந்தைகளின் நேர்மறையான குறிப்புகளுக்கு மத்தியில் ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று பச்சை நிறத்தில் திறக்கப்பட்டுள்ளன. சென்செக்ஸ் 31,977.82 என்ற உச்சத்தை எட்டியது, மேலும் 632.65 புள்ளிகள் அல்லது 2.02 சதவீதம் அதிகரித்து 31,959.87 ஆக வர்த்தகம் செய்து வந்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 174.20 புள்ளிகள் அல்லது 1.90 சதவீதம் உயர்ந்து 9,328.60 ஆக உயர்ந்தது.
ஜப்பானின் மத்திய வங்கி நிதிச் சந்தைகளை உயர்த்துவதற்காக அதிக சொத்து கொள்முதல் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் இன்று ஆதாயமடைந்துள்ளன,
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார சேதம் எதிர்பார்த்ததை விட மோசமானதாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்களுக்கு மத்தியில் பங்கு சந்தை உயர்ந்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.