Scam Alert: பொன்சி கிரிப்டோகரன்சி மோசடி 1 டிரில்லியன் ரூபாய்: அதிர்ச்சி தகவல்

பொன்சி பண மோசடி வழக்கில் சுமாராக 1 டிரில்லியன் ரூபாய் அளவிலான பணம் இந்தியர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2022, 06:24 PM IST
  • பொன்சி திட்ட மோசடியில் லட்சக்கணக்கானவர்களிடம் மோசடி
  • தொடரும் அமலாக்க விசாரணை
  • சுமார் ஒரு டிரில்லியன் ரூபாய் அளவில் மோசடி
Scam Alert: பொன்சி கிரிப்டோகரன்சி மோசடி 1 டிரில்லியன் ரூபாய்: அதிர்ச்சி தகவல் title=

10 சதவீத மாதாந்திர வருவாயுடன் GainBitcoin Ponzi திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கான ஒருவரில் நீங்களும் ஒருவரா?  GainBitcoin Ponzi திட்டம் முதலீட்டாளர்களுக்கு 10 சதவீத மாதாந்திர வருவாயை வழங்குவதாக உறுதியளித்தது.

அதில் குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் இந்திய ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிப்டோகரன்சி-ஸ்கேம், பிட்காயின் மோசடி எச்சரிக்கை

GainBitcoin மோசடி 2015 ஆம் ஆண்டில் வடிவம் பெறத் தொடங்கியது. கிரிப்டோ பிரமிட் போன்சி மோசடியின் மூளையாக செயல்பட்ட அமித் பரத்வாஜ் தனது பிட்காயின் அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தை “கெயின்பிட்காயின்” என்று தொடங்கினார்.

கிரிப்டோ உலகத்தைப் பற்றிய போதிய அறிவு இல்லாத புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. மார்ச் 2018 இல் பரத்வாஜ் தனது குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாலும், மோசடி தரும் அதிர்ச்சிகள் இன்னும் திகைப்பூட்டுகின்றன.  

மேலும் படிக்க | படு வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி, அச்சத்தில் முதலீட்டாளர்கள்

சுமார் 1 லட்சம் பேர் இந்த ஊழலில் 1 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் இழந்திருக்கலாம். இந்த ஊழல் தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா மாநிலத்தில் (13 எஃப்ஐஆர்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.என்.எஸ்அறிக்கை தெரிவிக்கிறது.

போன்சி திட்டத்தின் (Ponzi scheme) மூளையாக செயல்பட்ட அமித் பரத்வாஜ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டார். பரத்வாஜ் 3,85,000 முதல் 6,00,000 வரை பிட்காயினைச் சேகரித்திருக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இது பிட்காயினின் தற்போதைய மதிப்பீட்டின்படி வெறும் 1 டிரில்லியன் ரூபாய் மட்டுமே. பிட்காயின் மதிப்பு கடந்த ஆண்டு நவம்பரில் 68,000 டாலர்கள் என்ற உயர் அளவில் இருந்தது. தற்போது அதன் மதிப்பு மிகவும் குறைந்து சுமார் $21,000 என்ற அடிமட்ட மதிப்பில் உள்ளது.

கெயின் பிட்காயின் மோசடி குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The GainBitcoin scam என்ற பொன்சி திட்டத்துடன் இணைக்கப்பட்ட 60,000 ஐடிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை போலீசார் கண்டுபிடித்தனர். 

GainBitcoin மோசடி என்றால் என்ன?
மற்ற பிரமிட் போன்சி திட்டங்களைப் போலவே, GainBitcoin மோசடி புதிய முதலீட்டாளர்களை அவர்களின் முதலீடுகளில் நம்பத்தகாத வருமானத்துடன் கவர்ச்சிகரமான அறிவிப்புடன் வெளிவந்தது.

இந்த குறிப்பிட்ட ஊழல் வழக்கில், அமித் பரத்வாஜ் தனது கீழ் ஏழு பேரைக் கொண்ட குழுவை வைத்திருந்தார்.  'செவன் ஸ்டார்ஸ்' (Seven Stars) என்று அழைக்கப்பட்ட அவர்கள், இந்தத் திட்டத்திற்கு பலரை கவர்ந்திழுக்கும் பணியை மேற்கொண்டனர்.  

மேலும் படிக்க | Beware: க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி

GainBitcoin Ponzi திட்டம், 18 மாத காலத்திற்கு அவர்களின் முழு முதலீட்டில் 10 சதவீத மாதாந்திர வருவாயை வழங்கும் வாக்குறுதியுடன் அதிகமான முதலீட்டாளர்களைக் கொண்டு வந்தது. உதாரணமாக, ரூ. 1,000 முதலீடு செய்தால், 18 மாத காலத்திற்கு மாதம் ரூ.100 வருவாய் கிடைக்கும்.

கவர்ச்சிகரமான இந்த வருமானம் அதிகமான மக்களை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்தது. தொடக்கத்தில், புதிய உறுப்பினர்களின் முதலீடு பழைய முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அளித்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து கிரிப்டோ பரிமாற்றங்களையும் RBI நிறுத்தும் வரை அது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆர்பிஐ தலையீட்டுக்கு பிறகு, முதலீட்டாளர்கள் குறைந்த நிலையில் திட்டம் வீழ்ச்சியடைந்தது. 

மேலும் படிக்க | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன? 

பரத்வாஜ் மார்ச் 2018 இல் கைது செய்யப்பட்டார். பரத்வாஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மொத்தம் 8,000 முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன. இந்த மோசடி செய்பவர்கள் சுமார் 84,617 பயனர் ஐடிகளை வைத்திருந்ததாகவும், 82,132 பிட்காயின்களை குவித்திருப்பதாகவும் அது கூறியது.

விசாரணை
இந்த ஆண்டு மார்ச் மாதம், அமலாக்க இயக்குநரகம் (ED) உச்ச நீதிமன்றத்திடம் GainBitcoin மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு அணுகல், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை அவரது கிரிப்டோ வாலட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியது. 

“இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மனுதாரர், விவேக் பரத்வாஜ், மஹேந்தர் பரத்வாஜ் மற்றும் பலதரப்பட்ட சந்தைப்படுத்தல் முகவர்கள் மற்றும் கூட்டாளிகளின் உதவியுடன் அமித் பரத்வாஜ் 80,000 பிட்காயின்களை சேகரித்துள்ளது தெரியவந்துள்ளது என்று அமலாக்க இயக்குக்நரகம் தெரிவித்தது. 

மாரடைப்பால் இறந்த தலைவரின் சகோதரர் கிரிப்டோ வாலட்டின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வைத்திருப்பதாக ED கூறியது. அவர், விசாரணை அதிகாரியிடம் விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

EDயின் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பல கிரிப்டோ வாலட்டுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மாத தொடக்கத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெரிய விசாரணையின் ஒரு பகுதியாக, டெல்லி உட்பட 6 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News