இல்லத்தரசிகளுக்கு இனிமையான செய்தி... சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு!

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் விலை குறித்த நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2023, 04:06 PM IST
  • சமையல் எண்ணெய் விலை குறித்த நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
  • பருப்பு, அரிசிக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது.
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதானஇறக்குமதி வரியை குறைத்த அரசாங்கம்.
இல்லத்தரசிகளுக்கு இனிமையான செய்தி... சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு! title=

சமையல் எண்ணெய் விலை சரிவு: பணவீக்கத்தில் சாமானிய மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் செய்தி உள்ளது. பருப்பு வகைகள், அரிசி, மாவு, மசாலா மற்றும் இதர உணவுப் பொருட்கள் மீதான விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கத்தின் தாக்குதலுக்கு மத்தியில், சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் விலை குறித்த நல்ல செய்தி வெளியாகியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.95 முதல் ரூ.100 வரையிலும், கடுகு எண்ணெய் லிட்டருக்கு ரூ.105 முதல் ரூ.110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி வரியை குறைத்த அரசாங்கம்

உண்மையில், எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இரண்டின் இறக்குமதி வரியை 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக 5 சதவீதம் குறைத்தது.

மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!

இந்தியா தனது எண்ணெய்  தேவையில் 60%  அளவை இறக்குமதி செய்கிறது

இந்தியா தனது உபயோகத்தில் 60 சதவீத தாவர எண்ணெயை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 24 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில், இந்தியா சுமார் 14 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

பருப்பு, அரிசிக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது

கடந்த சில நாட்களாக பல சமையல் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பருப்பு, அரிசியை அடுத்து தற்போது கோதுமை மாவு விலையும் அதிகரித்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதனுடன், மசாலா மற்றும் உலர் பழங்களின் விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பண்டிகை காலங்களில் சாமானிய மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் வித்துக்களின் வரத்து 

பொதுவாக, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சமையல் எண்ணெய் விலை உயரும். ஆனால் இப்போது சமையல் எண்ணெய் குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. முன்னதாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் வித்துக்களின் வரத்து போதுமான அளவு உள்ளதால் விலை உயர வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக நிபுணர்கள் கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News