சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு கணிதப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
CBSE will conduct re-examination of Maths paper for class X and Economics paper of class XII. #boardexams pic.twitter.com/RCOwqRt6EZ
— ANI (@ANI) March 28, 2018
இதற்க்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன.
ஒருசில பாடங்களுக்கான கேள்வி தாள்கள் இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் பிளஸ்2 பொருளாதார பாடத்துக்கு மற்றும், 10வது வகுப்பு கணித பாடத்துக்கு தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.