மிருக தோல் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாண போராட்டம்!

மிருகங்களின் தோலினை கொண்டு ஆடம்பர பொருட்கள் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனா இளைஞர்கள் நிர்வாண போராட்டதிதல் ஈடுப்பட்டுள்ளனர்!

Last Updated : Dec 20, 2018, 04:58 PM IST
மிருக தோல் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாண போராட்டம்! title=

மிருகங்களின் தோலினை கொண்டு ஆடம்பர பொருட்கள் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனா இளைஞர்கள் நிர்வாண போராட்டதிதல் ஈடுப்பட்டுள்ளனர்!

மிருக தோல் பொருட்கள் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனாவின் பால்சா டி சட்டனிலுயாவில், AnimaNaturalis இயக்கதினர் சுமார் 50 பேர், நடுவீதியில் நிர்வாணமாக, போலி ரத்தங்களை தங்கள் மீது ஊற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வாயிலா ஜீவன்களை அழித்து, அவற்றின் உடல் பாகத்தில் தனிநபர் லாபம் அடைவது குற்றம் என வலியுறத்தி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

போராட்டகாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப, போராட்ட கூட்டத்தில் பங்கேற்றவர்கள் "ஒரு ஆடைக்கு எத்தனை உயிர் தேவை?"(“How many lives for a coat?”) என்ற வாசங்கள் பதித்த பதாகைகளை கையில் ஏந்தி அமர்ந்திருந்தனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம்., கெனடாவினை மையமாக கொண்டு இயக்கும் பிரபல குளிர்கால ஆடை தயாரிப்பு நிறுவனம் Canada Goose நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் உற்பத்திக்கு பல உயிரினங்கள் பலியாகவுதாக கூறி, PETA இயக்கத்தை சேர்ந்த அமெரிக்க இளைஞர்கள் 5 பேர் கொண்ட குழு மேலாடை இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending News