How To Stop Overeating : நம்மில் பலருக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனால், பலருக்கு உடல் எடை அதிகரிப்பது, கொழுப்பு சேருவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். எனவே, அதனை குறைக்க சில வழிகள் இருக்கிறது. அவை என்ன தெரியுமா?
உணர்ச்சி தூண்டுதல்களை கண்டுபிடியுங்கள்:
உங்களுக்கு ஏன் சாப்பிட தூண்டுகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஏன் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வு வருவது எப்போது என கண்டுபிடித்து, அது போர் அடிப்பதனால் வருகிறதா, சோகமாக இருப்பதனால் வருகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பின்பு, அதை சரிசெய்ய நீங்கள் முற்பட வேண்டும்.
கவனத்துடன் சாப்பிட வேண்டும்:
நம்மில் பலருக்கு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டும், தொலைபேசியை பார்த்துக்கொண்டும் உணவு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது போன்ற கவனச்சிதறல்களை தவிர்த்துவிட்டு, உங்கள் பசியை தீர்க்க அமைதியாக சாப்பாட்டின் மீது மட்டும் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்களின் பசியை தீர்க்கிறதா என்பதை கவனித்து, வயிற்று பசி ஆறும் வரை சாப்பிட வேண்டும்.
பகுதிகளாக பிரித்து சாப்பிட வேண்டும்:
உங்கள் சாப்பாட்டினை பகுதிகளாக பிரித்து சாப்பிட வேண்டும். எந்த அளவு சாப்பிடுகிறீர்களோ, அதற்கென்று தனியாக ஒரு கிண்ணத்தினை வைத்து, அந்த கிண்ண அளவு சாப்பாட்டினை மட்டும் சாப்பிட வேண்டும். பசிக்கும் போது மட்டும் சாப்பிட உங்கள் உடலையும் மனதையும் பழக்கிக்கொள்ள வேண்டும். இது நீங்கள் உங்களையே அறியாமல் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும்.
சிரான உணவு:
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் புரதச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் ஃபைபர் சத்துகள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல, கடை உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, ஹெல்தி ஸ்நாக்ஸை சாப்பிட வேண்டும்.
நீர்ச்சத்து:
பல சமயங்களில், நமக்கு தாகம் எடுப்பது கூட, பசி உணர்வு போல இருக்கும். இதை தவறாக புரிந்து கொண்டு பலர் அதிகமாக சாப்பிட ஆரம்பித்து விடுவோம். இதைத்தவிர்க்க, சாப்பிட்ட பின் பசிக்கும் போது நாம் முதலில் தண்ணீர் குடித்து, பழச்சாறு குடித்து அந்த பசி தணிகிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஆப்ஷனுக்கு செல்லலாம்.
உணவை தவிர்க்க வேண்டாம்:
ஒரு சிலர், டயட் இருக்கிறேன், உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் சில வேளை உணவுகளை தவிர்த்து விடுவர். அதிலும், காலை உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, மூன்று வேளை உணவினை உட்கொள்கிறீர்கள் என்றால், அந்த மூன்று வேலையும் சரியாக சாப்பிட வேண்டும். எடுத்துக்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்ளலாமே தவிர, சாப்பாட்டை ஸ்கிப் செய்யக்கூடாது.
மேலும் படிக்க | குண்டாக இருந்தாலும் தொப்பை தெரியாமல் புடவை கட்டலாம்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ