Flipkart Big Saving Days Sale 2024: இ-காமர்ஸ் தளங்களின் ஆன்லைன் சலுகை விற்பனையில் மலிவான விலையில் பல பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கின்றன. அதனால்தான் ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களின் சலுகை விற்பனை அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், Flipkart இன் புதிய சலுகை விற்பனை தொடங்க உள்ளது.
ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் என்னும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், பல கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், ஐபோன், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் (Flipkart) பிக் சேவிங் டேஸ் சேல் 20 டிசம்பர் 2024 முதல் தொடங்க உள்ளது. எனவே, நீங்கள் பொருட்கள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போதிருந்தே விருப்பப்பட்டியலை உருவாக்கவும். பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் கிடைக்கும் சலுகைகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்
நீங்கள் மலிவான ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் சலுகை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை விற்பனை டிசம்பர் 20, 2024 முதல் தொடங்கி 25 டிசம்பர் 2025 வரை நடைபெறும். இதில், iPhone 15 Plus, Nothing CMF Phone 1, Vivo T3 Pro, Poco M6 5G போன்ற ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும்.
பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்
Flipkart இன் வரவிருக்கும் விற்பனையில், கேஜெட்டுகள் மட்டுமின்றி மற்ற பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். வீட்டிற்கு புதிய படுக்கை வாங்க நினைத்தால், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.6,900 ஆரம்ப விலையில் புதிய படுக்கை கிடைக்கும். அலமாரியின் ஆரம்ப விலை 5,490 ரூபாயாகவும், அலுவலக நாற்காலியின் விலை 2,490 ரூபாயாகவும் இருக்கும்.
பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கேட்ஜெட்களுக்கு சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் ஸ்மார்ட்வாட்ச் வாங்கினால், நிறைய பணத்தை சேமிக்கலாம். இதில், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை வெறும் ரூ.999 ஆரம்ப விலையில் வாங்க முடியும். இது தவிர, சார்ஜர் மற்றும் கேபிள் மற்றும் மொபைல் கவர்கள் மீது 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ரூ.499 ஆரம்ப விலையில் வாங்கலாம். வேகமாக சார்ஜ் செய்யும் பவர் பேங்க்களில் குறைந்தபட்சம் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
பிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் சலுகை விற்பனை
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் தற்போது சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த சலுகை விற்பனை இன்று டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த சலுகை விற்பனையின் போது, சாம்சங் மற்றும் பல பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்ச தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அசத்தல் பிளான்... தினம் 2GB டேட்டா உடன் இலவச நெட்பிளிக்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ