இரவில் படுக்கும் முன் 2 கிராம்பு போதும்... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

இந்திய மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. உணர்விற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் கொடுக்கும் திறன் கிராம்புக்கு உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு, பலவித நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2024, 05:42 PM IST
  • கிராம்பு மரத்தின் காய்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள், எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.
  • கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.
  • இரவில் இரண்டு கிராம்பு சாப்பிட்டால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்.
இரவில் படுக்கும் முன் 2 கிராம்பு போதும்... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு title=

இந்திய மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. உணவிற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் கொடுக்கும் திறன் கிராம்புக்கு உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு, பலவித நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. கிராம்பு மரத்தின் காய்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள், எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அதிகம் அல்ல தினம் இரண்டு கிராம்புகள் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம்.

கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்கும் கிராம்பில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் அதிகம் காணப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தவிர, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயாமின் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய கூறுகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன. இந்நிலையில், தினமும் இரவில் 2 கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

இரவில் இரண்டு கிராம்பு சாப்பிட்டால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

1. இரவில் கிராம்பு சாப்பிடுவது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் செரிமான அமைப்பும் சரியாக வேலை செய்கிறது. 

2. உங்களுக்கு குமட்டல் இருந்தால் 2 கிராம்புகளை தண்ணீருடன் அரைத்து சிறிது சூடாக்கவும். இதனை சிறிது சிறிதாக குடித்து வர குமட்டல் மற்றும் அதிக தாகம் பிரச்சனை குணமாகும்.

3. தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட, இரவில் தூங்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | எச்சரிக்கை... இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்... சில ஆபத்தான பானங்கள்

4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், கிராம்புகளை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள். வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, தினமும் கிராம்பு சாப்பிடலாம்.

5. பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைக்கு கிராம்பு நன்மை பயக்கும். இரவு தூங்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இது குழியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு பல்வலியையும் நீக்கும். 

6. மூட்டுவலி போன்ற நோய்களில் இருந்து விடுபடவும் கிராம்புகள் உதவும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.  

7. சளி மற்றும் இருமல் பிரச்சனை அதிகமாக இருந்தால் தினமும் இரவு தூங்கும் முன் 2 கிராம்புகளை சாப்பிடுங்கள். 

கிராம்புகளை சாப்பிடும் சரியான முறை

இரவில் தூங்கும் முன், பல் துலக்கி வாயை நன்கு சுத்தம் செய்து, 2 கிராம்புகளை மென்று, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். விரும்பினால், 2 கிராம்புகளை நன்றாக இடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News