Haridwar:ஆடி மாத சிவராத்திரி பூஜை ரத்து, 144 தடை அமல், சாத்வி பிரக்ஞா வெளியேற்றம்

ஆடி மாதத்தில் Haridwarஇல் நடைபெறும் சிறப்பு பூஜைகளும், ஜலாபிஷேகமும் ரத்து... நகரில் 144 தடையுத்தரவு அமல்! என்ன தான் நடக்கிறது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2020, 04:24 PM IST
  • ஹரித்வாரில் ஆடி சிவராத்திரி பூசைக்கு தடை
  • நகரில் 144 தடை உத்தரவு அமல்
  • சாத்வி பிரக்ஞா நகரில் இருந்து வெளியேற்றம்
Haridwar:ஆடி மாத சிவராத்திரி பூஜை ரத்து, 144  தடை அமல், சாத்வி பிரக்ஞா வெளியேற்றம் title=

இந்துக்களால் மாதந்தோறும் அனுசரிக்கப்படும் நோன்பு சிவராத்திரி. சிவனுக்காக அனுசரிக்கப்ப்டும் விரதம் என்பதை பெயரில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு தூங்காமல் இருந்து, பூசைகள் செய்து சிவபெருமானை வழிபடுவார்கள்.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு சிவனுக்கு மிகவும் விசேஷமானது. அதனால் தான் அனைத்து சிவராத்திரிகளிலும் மேன்மையானது என்பதை குறிக்கும் வகையில் ’மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது.

ஆடி மாத Shivratriயும் மிகவும் விசேஷமானது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித நகரான ஹரித்வாரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள், தங்கள் வசதிக்கும், வேண்டுதலுக்கும் ஏற்ப 48 நாட்கள், 18 நாட்கள் என விரதம் இருந்து காவடிகளை எடுத்துக் கொண்டு நடைபயணமாக Haridwar சென்று சிவனை வணங்கி, அபிசேகங்களும் சிறப்பு பூசைகளும் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளை அரங்கேற்றும் கொரோனா பெருந்தொற்றினால், பக்தர்களின் பக்திப் பயணம் ஏற்கனவே தடைபட்டுள்ள நிலையில்,  
இன்றைய விஷேச  சிவராத்திரி பூசைகளுக்கும் ஜலாபிஷேகத்திற்கும் (Jalabhishek)தடை விதிப்பதாக ஹரித்வார் மாவட்ட காவல்துறையும், நிர்வாகமும் தெரிவித்துள்ளன.  

இமயமலைச் சரிவில் அமைந்துள்ள மாயாபுரி என்றும் அழைக்கப்படும் ஹரித்வாரில் பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 144 தடையுத்தரவும் அமலில் உள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தாலும், காவல்துறையினரும் PACயும் அதிக எச்சரிகையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஹரித்வாரில் உள்ள Daksha Prajapati ஆலயத்திற்கு  ஜலபிஷேக்கிற்காக வருகை தந்திருந்த துறவியும், அரசியல்வாதியுமான சாத்வி பிரக்ஞாவும் ஹரித்வாரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நாளை திங்கட்கிழமை, ’சோமாவதி அமாவாசை’ இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.  வழக்காக புனித நதிகளில் நீராடி மக்கள் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால், கொரோவை முன்னிட்டு, நதிகளில் புனித நீராடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை செய்துள்ளது.  இதனால் ஹரித்வாரில் இருந்தாலும் கூட உள்ளூர்வாசிகளும் புனித நீராட முடியாது என்ற வருத்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Read Also | China boycott: ரக்ஷாபந்தன் பண்டிகையில் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா...

நதிக்கரைகளிலும், பிற கோவில்களிலும் பூசாரிகள் மட்டுமே பூசை செய்ய அனுமதி உண்டு. ஞாயிற்றுக்கிழமையன்று லாக்டவுன் அமலில் இருப்பதால், ஜலாபிஷேகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர காவல்துறை எஸ்பி  கமலேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

இதனிடையில் வழக்கமாக நடைபெறும் கும்பத் திருவிழா நிகழ்ச்சியாவது, பாரம்பரிய சடங்குகள் மற்றும் மரபுகளுடன் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி  இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

எது எப்படியிருந்தாலும், இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கமானது, மக்களின் அடிப்படை வாழ்க்கையையும், உலகத்தையும் மட்டும் செல்லரிக்கவில்லை.  பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைகளையும் வீட்டுற்குள்ளே ஒடுக்கிவிட்டது.  மனதால் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த பூசலாருக்கு சிவபெருமான் நேரில் வந்து ஆசி வழங்கியது போல, மாயாநகரி என்ற மற்றொரு பெயரையும் கொண்ட ஹரித்வாருக்கு செல்வதாக நினைத்து பக்தர்கள் மனதாலேயே சிவனுக்கு பூசையும், ஜலாபிஷேகமும் செய்து இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது!!! 

Trending News