குறைந்த நேரத்தில் ​திருப்பதியில் தரிசனம் செய்ய புதிய திட்டம்!

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். 

Last Updated : May 4, 2018, 02:47 PM IST
குறைந்த நேரத்தில் ​திருப்பதியில் தரிசனம் செய்ய புதிய திட்டம்! title=

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாகவும், விசேஷ நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாலும், திருப்பதி வரும் பக்தர்கள் பட்டிகளில் அடைக்கப்பட்டு பின்னர் குழு குழுவாக தரிசணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். 300 ரூபாய் டிக்கெட் பெறும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் மேற்கொள்வதைப் போல், தற்போது இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய புதிய நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் முதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய தங்களது ஆதார் அடையாள அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து இதற்கான டிக்கெட்டை பக்தர்கள் பெற முடியும். டிக்கெட் பெறுபவர்கள் 2 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 

திருமலையில் உள்ள பேருந்து நிலையம், அறைகள் பெறும் சி.ஆர்.ஓ அலுவலகம், கௌஸ்துபம், நந்தகம் பக்தர்கள் ஓய்வு அறை, எம்.பி.சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான டிக்கெட் கவுண்டர்கள் இயங்கும்.

முன்னதாக கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி-க்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஜூலை 16-ம் தேதி வரை சிபாரிசு கடுதங்கள் ஏற்கப்படாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Trending News