சனிப்பெயர்ச்சி: தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான்

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். 

Last Updated : Dec 19, 2017, 10:18 AM IST
சனிப்பெயர்ச்சி: தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான் title=

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். ந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான்.

விருச்சிகம், தனுசு, மகரம் ராசிகள் ஏழரை சனியை கடக்க பரிகாரம்!

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். சனிபகவான் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. 

திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது. இவரை தரிசித்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Trending News