இன்று விடுமுறை நாள்: உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன...?

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2020, 12:22 PM IST
இன்று விடுமுறை நாள்: உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன...? title=

ஞாயிற்றுக்கிழமை தினபலன்: 19-01-2020

மேஷம்:
இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.     
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

ரிஷபம்:
இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:
இன்று பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். 
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்:
இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சிம்மம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

துலாம்:
இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு   கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்:
இன்று காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு:
இன்று ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக் கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மகரம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:
இன்று சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:
இன்று எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்கள்  தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Trending News