இன்று அனிதா குப்புசாமியின் திருமண நாள்..

Last Updated : Sep 11, 2017, 01:24 PM IST
இன்று அனிதா குப்புசாமியின் திருமண நாள்..

இசைக் குயிலின் வாழ்க்கை பயணம் இன்று 

நாட்டுப்புற இசைக் குயில்களின் திருமண நாள் இன்று. கல்லூரியில் படிக்கும்போது புஷ்பவனம் குப்புசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அனிதா குப்புசாமி. இவர்களின் இசைப்பயணம் சமுக சூழ்நிலை சார்ந்து இருக்கும்.

தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா மற்றும் அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார்  3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

தனது பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சினை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய சமூக விழிப்புணர்வுகளை இணைத்து பாடி வருகிறார்.

நாட்டுப்புறப் பாடகர், கருநாடக இசை, பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகி என்று பல குணம் கொண்டவர். 

இன்று இவர்களின் திருமண நாளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு  உள்ளனர். அனிதா குப்புசாமியின் திருமண நாளை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமுக வலைதளங்களில் வாழ்த்து கூறியுள்ளனர்.  

 

More Stories

Trending News