காமன்வெல்த் 2018 குத்துச்சண்டைப் போட்டியில் மேரி கோம், இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
இதில் 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில், காலிறுதி சுற்றில் ஸ்காட்லாந்தின் மேகன் கோர்டனை, இந்தியாவின் மேரி கோம் எதிர்கொண்டு வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற அரையிறுதியில், இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன், மேரி கோம் மோதினார்.
இந்நிலையில் 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் தில்ருக்ஷியை வீழ்த்தி மேரி கோம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனால் இந்தியாவுக்கு பதக்கம் பெறுவதை உறுதி செய்துள்ளார் மேரி கோம்.