பலதர போராட்டங்களுக்குப் பிறகு, பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட JNU பேராசிரியர் அதல் ஜோஹரி கைது செய்யப்பட்டுள்ளார்!
புதுடெல்லி ஜெவஹர் லால் நேரு பல்கலை கழகத்தில் வாழ்க்கை அறிவியல் துறை பேராசிரியராக இருப்பவர் அதல் ஜோஹரி. Mphil, P.hd மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இவர் மீது பாலியல் தூண்டல் வழக்கு பதியப்பட்டது. "வகுப்பு நேரங்களில் தன்னை அத்துமீறி தொடுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புருத்துவதாகவும்" JNU மாணவி ஒருவர் புதுடெல்லி வசந்து குஞ்ச் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி பல்கலை நிர்வாக பணியில் இருந்து விலகினார். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர, தென்மேற்கு பகுதி காவல் நிலைய அதிகாரி மில்லிண்ட் தும்பரே பேராசிரியின் மீது IPC 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டார்.
ஆனால் இதற்கு மாறாக, இந்நிகழ்வினை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரின் மீது JNU மாணவிகள் கூடுதலாக 6 பேர் பாலியல் தூண்டல் புகார் அளித்தனர். எனினும் காவல்துறை தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று முன்னதாக டெல்லி வசந்து கஞ்ச் பகுதியில் CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை குற்றம்சட்டப் பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிருத்தப்பட்டார். இதனையடுத்து தான் கைது செய்யப்பட்டால் தன் பணிக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் பெயில் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அதனை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
JNU Professor Atul Johri moves bail plea in Delhi's Patiala House Court, says 'sending me to the jail will spoil my career'.
— ANI (@ANI) March 20, 2018
இதனையடுத்து அதல் ஜோஹரியை 14 நாள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!