சென்னை மெரினா கடற்கரையில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க இருக்கிறார்கள். அதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில்...!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.
காலை 8.30 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றனர்.
முன்னதாக, 'மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கூடாது என்று டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.