CBSE Exams 2021: தேர்வுகள் ஜனவரியில் இருக்கலாம், நுழைவுச்சீட்டை பதிவிறக்க வழி

சிபிஎஸ்இ (CBSE) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் 2021 ஜனவரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளுக்கு (CBSE Board Exams 2021) நுழைவுச் சீட்டை இந்த வலைதளத்தில் வெளியிடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2020, 10:23 AM IST
  • கொரோனா வைரஸால் கல்வித்துறையில் வழக்கமான நடைமுறைகளில் மாற்றம்
  • 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 வரை பள்ளிகள் திறக்கப்படாது
  • நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்சி தேர்வுகள் 2021 ஜனவரியில் நடைபெறலாம்
CBSE Exams 2021: தேர்வுகள் ஜனவரியில் இருக்கலாம், நுழைவுச்சீட்டை பதிவிறக்க வழி title=

கிடைத்த ஆதாரங்களின்படி, CBSE Exams 2021: தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படலாம், தேர்வு நுழைவுச் சீட்டை (Admit Card) பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ...  

சிபிஎஸ்இ (CBSE) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் 2021 ஜனவரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளுக்கு (CBSE Board Exams 2021) நுழைவுச் சீட்டை இந்த வலைதளத்தில் வெளியிடுகிறது. எவ்வளவு தான் படித்து தேர்வை எதிர்கொள்ள தயாரானாலும், நுழைவுச் சீட்டு இருந்தால் தான் தேர்வு மையத்திற்குள்ளே செல்ல முடியும். எனவே முக்கியமான இந்த செயல்முறையை தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

ALSO READ | அட்மிட் கார்டை மறந்த மாணவி; 5 கி.மீ., பயணம் செய்து மாணவிக்கு உதவிய போலீஸ்!!

பள்ளியில் படிப்பவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு சிபிஎஸ்இ நுழைவுச் சீட்டை கார்டை ('Admit Card 2021') வழங்குகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து நுழைவுச்சீட்டைப் பெற முடியும். அதே நேரத்தில், தனித்தேர்வர்கள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவர்களின் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வார்கள்.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ 2021 அட்மிட் கார்டை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் (CBSE Board Exams 2021):

  1. முதலில் cbse.nic.in. வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. பின்னர் வலைத்தளத்தைத் திறந்த பிறகு, 'In Focus'  பிரிவில் சொடுக்கவும்.
  3. இதற்குப் பிறகு, ஒரு புதிய பக்கம் திறந்து 'Admit Card 2021' இணைப்பைக் கிளிக் செய்யும்.
  4. பின்னர் உள்நுழைவு பக்கம் திறக்கும். இதில், உங்கள் பயனர் ஐடி (User ID), கடவுச்சொல் (Password) மற்றும் பாதுகாப்பு குறியீடு (Security Pin) ஆகியவற்றை நிரப்பவும்.
  5. இதற்குப் பிறகு, உள்நுழைவு (‘Login’) விருப்பத்தை சொடுக்கவும்.
  6. இப்போது உங்கள் நுழைவுச்சீட்டு (Admit Card) திரையில் தோன்றும். 

Also Read | மார்ச் 31 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபடாது..

பின்னர் இங்கிருந்து உங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அச்சிட்டுக் கொள்ளலாம்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News