CTET Exam: டிசம்பர் 16 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு துவக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் நடக்கவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2021, 08:29 AM IST
CTET Exam: டிசம்பர் 16 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு துவக்கம் title=

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் நடக்கவுள்ளது.

இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது.,

சி.டி.இ.டி., (CTET Exam) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர்16 முதல், அடுத்த ஆண்டு ஜனவரி 13 வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு தேதிகள் உள்ளிட்ட விபரங்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதியில் வெளியிடப்படும். தேர்வு எழுத விரும்புவோர் இதே இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | சிடிஇடி Key Answer வெளியிடப்பட்டது; link இணைப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விவரம்
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும்.

இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களைப் பள்ளிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும். 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் கொடுக்கப் படுகிறது.இச்சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ALSO READ | NEET தேர்வை விட அதிக சர்ச்சைகள் நிறைந்த CTET தேர்வு...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News