ICSE 10 ஆம் வகுப்பு ISC 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள்: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி?

இந்தியாவின் இரண்டு மத்திய கல்வி வாரியங்களில் ஒன்றான - இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CICSE), பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 10, 2020, 05:10 PM IST
  • மதிப்பெண்களை சரிபார்க்க லிங்க் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
  • முடிவு அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மார்க் ஷீட்கள் கிடைக்கும் என்று கௌன்சில் கூறியுள்ளது.
  • Re-eveluation அல்லது Re-checking செய்ய விண்ணப்பிக்க ஆன்லைன் போர்டல்கள் ஏழு நாட்களுக்கு அதாவது ஜூலை 10 முதல் ஜூலை 16 வரை திறந்திருக்கும்.
ICSE 10 ஆம் வகுப்பு ISC 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள்: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி? title=

CISCE போர்ட் ICSE 10 ஆம் வகுப்பு (ICSE Class 10), ISC 12 ஆம் வகுப்பு (ISC Class 12) முடிவுகள் 2020:

இந்தியாவின் இரண்டு மத்திய கல்வி வாரியங்களில் ஒன்றான - இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CICSE), பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மதிப்பெண்களை சரிபார்க்க லிங்க் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களது மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பெறுவார்கள்.

மொத்தம் 2,07,902 மாணவர்கள் ICSE பொதுத் தேர்வுகளை எழுதினார்கள். இதில் 2,06,525 பேர் தேர்ச்சி பெற்றனர். 112,668 மாணவர்களும் 95,234 மாணவிகளும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 88,409 மாணவர்கள் ISC தேர்வுகளை எழுதினர். அதில் 47,429 மாணவர்களும் 40,980 மாணவிகளும் அடங்குவர்.

வழக்கமாக, பள்ளிகளில்தான் மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificate) வழங்கப்படும். ஆனால் லாக்டௌன் காரணமாக, டிஜி லாக்கரின் உதவியுடன் டிஜிட்டல் முறையில் இது இப்போது கிடைக்கப்பெறும். மாணவர்கள் புதிய ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம்,  அல்லது பதிவு செய்துகொண்டு தங்கள் CISCE ISC மதிப்பெண்களைப் பெறலாம். முடிவு அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மார்க் ஷீட்கள் கிடைக்கும் என்று கௌன்சில் கூறுகிறது.

ALSO READ: ICSE: நாளை 10-12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எப்படி பார்ப்பது? முழு விவரம்

CISCE Board ICSE 10th, ISC 12th Result 2020: போர்டல் மூலம் எவ்வாறு தெரிந்துகொள்வது:

1. ‘Career Portal'-ல் லாக் இன் செய்து, ‘Examination system'-ல் கிளிக் செய்யவும்.

2. Menu bar-ல் ICSE அல்லது ISC-ல் கிளிக் செய்யவும்.

3. ‘Reports'-ல் கிளிக் செய்யவும்.

4. ‘Result tabulation'-ல் கிளிக் செய்யவும்.

5. உங்கள் ஸ்கோர்கார்ட், அதாவது மதிப்பெண்கள் திரையில் வரும். அதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

CISCE Board ICSE 10th, ISC 12th Result 2020: வலைதளம் மூலம் எவ்வாறு தெரிந்துகொள்வது:

1. cisce.org அல்லது results.cisce.org - ஏதாவது ஒரு வலைதளத்திற்குள் செல்லவும்.

2. ‘Results 2020' என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

3. ICSE/ISC 2020 -ல் கிளிக் செய்யவும்.

4. உங்கள் ரோல் நம்பரை உள்ளிடவும், CATCHA -ஐ நிரப்பவும்.

5. தேர்வு முடிவுகள் திரையில் வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

இணைய வசதி இல்லாதவர்கள் SMS மூலம் ICSE முடிவுகளைப் பெற, ICSE<space>roll number/ ISC முடிவுகளைப் பெற, ISC<space>roll number -ஐ டைப் செய்து 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

மதிப்பெண்களில் திருப்தி அடையவில்லையா? என்ன செய்வது? தங்கள் மதிப்பெண்களால் மாணவர்களுக்கு திருப்தி இல்லை என்றால், மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மீண்டும் திருத்தவோ அல்லது சரிபார்க்கவோ கோரலாம். Re-eveluation அல்லது Re-checking செய்ய விண்ணப்பிக்க ஆன்லைன் போர்டல்கள் ஏழு நாட்களுக்கு அதாவது ஜூலை 10 முதல் ஜூலை 16 வரை திறந்திருக்கும்.  

Trending News