JEE Advanced 2021 Exam Date Details: நாடு முழுவதும் ஜூலை 3 ஆம் தேதி JEE அட்வான்ஸ் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் சேர JEE தேர்வுகள் நடத்தப்படுகின்றன. JEE முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவர்.
நாட்டில் உள்ள தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர வேண்டும் என்றால், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE Exam) தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகள் ஜேஇஇ மெயின் (JEE main Exam), ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
ALSO READ | JEE Main தேர்வு 4 மாதங்களில் நடைபெறும். தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் தேர்வு எழுதலாம்
ஏற்கனவே நடப்பு கல்வியாண்டுக்கான JEE Main தேர்வு நான்கு மாதங்களில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்திருந்தார். அதாவது ஜே.இ.இ-மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23-26 வரை CBT முறையில் நடைபெறும். NEET தேர்வைப் போல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். மாணவ-மாணவிகள் தங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து எழுதலாம்.
#JEEAdvanced 2021 will be conducted on 3rd July 2021. The exam will be conducted by IIT Kharagpur: Minister of Education Ramesh Pokhriyal Nishank pic.twitter.com/ifsmGj9PEL
— ANI (@ANI) January 7, 2021
இந்த நான்கு திருப்பங்களில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வை எழுத முடியும். தேர்வு மாதத்தை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்ய முடியும். ஒரு மாணவர் நான்கு முறையும் தேர்வை எழுதினால் என்றால், அந்த நான்கு தேர்வில் எதில் அவர் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளரோ, அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று போக்ரியால் (Ramesh Pokhriyal) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | CBSC பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு, தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR