தேர்தல் முடிவு எதிரொலி... ஆந்திர CM சந்திரபாபு நாயுடு ராஜினாமா...

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார்!!

Last Updated : May 23, 2019, 12:55 PM IST
தேர்தல் முடிவு எதிரொலி... ஆந்திர CM சந்திரபாபு நாயுடு ராஜினாமா... title=

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார்!!

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்களின் படி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.  இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Trending News