ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 2023: தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை! ஓரிரு நாளில் தேதி..

Election Commission of India: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 6, 2023, 11:12 AM IST
  • தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்
  • இன்னும் 2-3 நாட்களில் சட்டசபை தேர்தல் குறித்து அறிவிக்கப்படலாம்.
  • 5 மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் மாறுபடலாம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 2023: தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை! ஓரிரு நாளில் தேதி.. title=

Assembly Election 2023 News Updates: தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் 2-3 நாட்களில் சட்டசபை தேர்தல் குறித்து அறிவிக்கப்படலாம். 5 மாநிலங்களான தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் தேர்தல் கமிஷன் கூட்டம் நடந்து வருகிறது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநிலங்களில் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 8 ஆம் தேதிக்குப் பிறகு எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் குறித்த தேதிகள் தேர்தல் ஆணியம் அறிவிக்கலாம். 2018 ஆம் ஆண்டில், தேர்தல் குறித்து அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாநில தேர்தல் ஒரே கட்டமா? அல்லது கட்டமா?

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் 2018 ஆம் ஆண்டு போலவே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சத்தீஸ்கரிலும் கடந்த முறை போலவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

 

மேலும் படிக்க - ராகுல் காந்தி 'தீயவர், மதத்திற்கும் ராமருக்கு எதிரானவர், புதிய சகாப்தத்தின் ராவணன்' -பாஜக

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் இருக்கலாம்

ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் மாறுபடலாம். ஆனால் ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் அக்டோபர் 10 முதல் 15க்கு இடைப்பட்ட நாளில் ஏதாவது ஒரு தேதியில் நடைபெறும். தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில், நான்கு மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.

மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது

மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆட்சியில் உள்ளது. 

மேலும் படிக்க - தெலுங்கானாவில் பாஜக-பிஆர்எஸ் இணையுமா? மாறும் காட்சிகள்! கேடிஆர் ஆவேசம்

4 மாநிலங்களின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

 

இந்த மாநிலங்களில் இவர்கள் ஆட்சி செய்கிறார்கள்

தெலுங்கானாவில் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சி நடக்கிறது, மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு உள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவிப்பதற்கு முன், ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து வருகிறது. அந்த வரிசையில் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான வியூகத்தை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் தனது பார்வையாளர்களின் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் படிக்க - சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News