MP Polls: மற்ற கட்சிகள் ஜெயித்தால் பாகிஸ்தானில் கொண்டாட்டம்தான்... பாஜக அமைச்சர் பரபரப்பு

Madhya Pradesh Polls 2023: பாஜகவை தவிர வேறு கட்சிகள் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம்தான் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2023, 12:38 PM IST
  • இன்று ம.பி.யில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மொத்தம் 230 தொகுதிகள் அங்குள்ளன.
  • 11 மணி நிலவரப்படி, 27.75% வாக்குகள் பதிவாகி உள்ளன.
MP Polls: மற்ற கட்சிகள் ஜெயித்தால் பாகிஸ்தானில் கொண்டாட்டம்தான்... பாஜக அமைச்சர் பரபரப்பு title=

Madhya Pradesh Polls 2023: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. அந்த வகையில், மிசோரமில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்திய பிரதேசத்தின் மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று (நவ. 17) நடைபெறுகின்றன.

பாஜக - காங்கிரஸ் யுத்தம் 

இதில் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக அரசு ஆட்சி தக்கவைக்க போராடி வருகிறது, இருப்பினும் கடந்த முறை பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை பாஜகவிடும் பறிகொடுத்ததை ஈடுகட்ட காங்கிரஸ் கட்சியும் கடுமையான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. 2,533 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

அந்த வகையில் பாஜக தரப்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கடும் பரப்புரையை மேற்கொண்டனர். காங்கிரஸ் தரப்பிலும் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் முதலமைச்சர் கமல் நாத், பிரியங்கா காந்தி என பலரும் பரப்புரை மேற்கொண்டனர். 

மேலும் படிக்க | காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பரபரப்பான வாக்குப்பதிவு

பரப்பரை நேற்று முன்தினத்தோடு நிறைவடைந்த நிலையில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பாலகாட் மாவட்டத்தில் உள்ள பைஹார், லாஞ்சி மற்றும் பரஸ்வாடா தொகுதிகளிலும், மாண்ட்லா மாவட்டத்தில் பிச்சியாவில் 55 சாவடிகள், மாண்ட்லா தொகுதிகள் மற்றும் திண்டோரி மாவட்டத்தில் 40 வாக்குச் சாவடிகள் என இந்த பகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மதியம் 3 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவை அனைத்தும் நக்ஸல் அபாயம் உள்ள தொகுதிகளாகும். மற்ற தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 

மத்திய பிரதேசத்தில் 2 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 261 ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 71 லட்சத்து 99 ஆயிரத்து 586 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,292 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 5 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்குச் செலுத்த தகுதியுடையவர்களாக உள்ளனர். அந்த வகையில், தற்போது 11 மணி நிலவரத்தில், 27.75% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர்கள் வாக்களிப்பு

மாநிலமே பரபரப்பாக இருக்கும் சூழலில் பல்வேறு தலைவர்கள் தங்களின் சொந்த தொகுதிகளில் வாக்குச் செலுத்தி வருகின்றனர். முன்னதாக, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் காலை தனது தொகுதியில் வாக்களித்தார். சௌஹான், அவரது மனைவி சாதனா சிங் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோர் செஹோர் மாவட்டத்தில் உள்ள புத்னி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர், அங்கு அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு முன், சவுகான் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான நகுல்நாத் மற்றும் நகுல்நாத்தின் மனைவி ஆகியோர் அவர்களின் சொந்த ஊரான சிந்த்வாரா மாவட்டத்தின் சௌசர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஷிகர்பூரில் வாக்களித்தனர். கமல்நாத் நாத் சிந்த்வாரா தொகுதியில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

உள்துறை அமைச்சர் பரபரப்பு கருத்து

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா,"மற்ற கட்சியினர் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தாமரை சின்னத்தை அழுத்தி பாஜகவை வெற்றிபெறச் செய்யுங்கள். வேறு கட்சி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் கொண்டாடும். நாட்டைப் பற்றி சிந்தித்து பாஜகவுக்கு வாக்களியுங்கள்" என்றார். மேலும், "நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களித்தால் எல்லையில் இருக்கும் நமது ராணுவ வீரர்களின் கரம் வலுப்படும். மீண்டும் மோடி வருகிறார் என்றால் பாகிஸ்தானில் அச்சம் ஏற்படும். யாருக்கெல்லாம் தேசத்தின் எல்லையில் போராட வாய்ப்பு கிடைக்கவில்லையோ அவர்களுக்கு இதுதான் சிறந்த வாய்ப்பு, நீங்கள் இதனை பயன்படுத்தி தேச நலனை காக்க வேண்டும்" என்றார். 

அவர் தாதியா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், இந்த முறை வெற்றி பெற்றால் முதலமைச்சராக பொறுப்பேற்பீர்களா என்ற கேள்விக்கு, 'நான் எப்போதும் பாஜக தொண்டன்' என பதிலளித்தார். நீங்கள் 

மேலும் படிக்க | ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி-மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News