தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதுவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி) உள்ளிட்ட 59 பேர் மனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த இரு நாட்களாக மனுத் தாக்கல் நடைபெறவில்லை என்பதால், இன்று பலர் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.