மத்தியில் யார் ஆட்சி? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

மத்தியில் அடுத்த ஆட்சி யாருடையது.....!! காலை 8 மணி முதல் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2019, 08:53 AM IST
மத்தியில் யார் ஆட்சி? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!! title=

மத்தியில் யார் ஆட்சி? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

 

 


டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்ட உள்ளது.

தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 

மக்களவை தேர்தல் நடந்து முடிந்தவுடன் அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா இருந்தது. அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புக்கள் வெளியானது. 

அதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூகவலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் கருத்து கணிப்பு, மற்றொரு பக்கம் வாக்குபதிவு இயந்திரம் மாற்றம் மற்றும் முறைகேடு என்று செய்திகள் வந்த வந்த வண்ணம் உள்ளதால், எதிர்கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்ப்பாரா? இல்லை காங்கிரஸ் தலைமையிலனா ஆட்சி அமைந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்ப்பாரா? என்பது தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

Trending News