இந்திய பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்!!

இன்றைய சென்செக்ஸ் 86.03 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 17.75 புள்ளிகள் உயர்வு வங்கி பங்குகள் பிரகாசிக்கின்றன...! 

Last Updated : May 22, 2019, 09:52 AM IST
இந்திய பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்!! title=

இன்றைய சென்செக்ஸ் 86.03 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 17.75 புள்ளிகள் உயர்வு வங்கி பங்குகள் பிரகாசிக்கின்றன...! 

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டைப் போலவே பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக இன்று காலை சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 86.03 புள்ளிகள் அதிகரித்து, 39,057.97 புள்ளிகளிலும், நிஃப்டி 17.75 புள்ளிகள் உயர்ந்து, 11,725.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. 

வங்கிகள், பைனான்சியஸ் சர்வீசஸ், ஆட்டோ, மெட்டல் ஆகியவற்றின் பங்குகள் உயர்வால் பங்குச்சந்தை ஏற்றத்தில் பெரிதும் உதவின. சென்செக்ஸ் ஏற்றத்தில் ரிலையன்ஸ் இண்டர்ஸ்டிரீஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி இந்தியா ஆகியவை முக்கிய பங்காற்றின. வரும் 23 ஆம் தேதி (நாளை) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதுவரை பங்குச்சந்தை பெரிய அளவில் மாற்றம் இருக்கும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நிலையான அரசு அமைவது மட்டுமே பங்குச்சந்தைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

Trending News