5வது முறையாக ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார்

நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

Last Updated : May 29, 2019, 11:33 AM IST
5வது முறையாக ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார் title=

நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்பார் என பிஜு ஜனதா தளம் தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

Trending News