நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 18-ல் தொடக்கம்...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 18 துவங்கி டிசம்பர் 13 வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 21, 2019, 12:21 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 18-ல் தொடக்கம்... title=

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 18 துவங்கி டிசம்பர் 13 வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகங்களுக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு டிசம்பர் 24-ஆம் நாள் வரை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது, டிசம்பர் 13-வரையில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும் தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டத்தொடர் நீட்டிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமர்வுக்கான தேதிகள் மற்றும் மூலோபாயம் குறித்து விவாதிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடைப்பெற்ற முதல் கூட்டத்தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேப்போன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல மசோதாக்கல் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையிலை சந்தித்து வரும் நிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் முக்கியதுவம் வாய்த சில மசோதாக்களை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வரி விகிதக் குறைப்பு போன்ற நிலைமைகளைக் கையாள்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், விவசாயம் மற்றும் வங்கி போன்ற பகுதிகள் தொடர்பான மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் தற்போதைய கூட்டத்தொடரில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை சரிபார்க்கும் ஒரு பயிற்சியின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம் அசாமில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை வெளியேற்றிய தேசிய குடிமக்களின் பதிவு (NCR) மீதான விவாதத்தை எதிர்க்கட்சி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NCR-ல் இருந்து வெளியேறிய முஸ்லிமல்லாதவர்கள் இந்திய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக குடியுரிமை (திருத்த) மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது தொழில்துறை உறவுகள் தொடர்பான மற்றொரு பெரிய தொழிலாளர் சீர்திருத்த மசோதாவையும் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21 அன்று கூட்டப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News