அரசு ஊழியர்களுக்கு இனி 5 நாள் மட்டுமே பணி; முதல்வர் அதிரடி!

சிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். கோலே, மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்று அறிவி்த்துள்ளார்

Last Updated : May 28, 2019, 09:03 AM IST
அரசு ஊழியர்களுக்கு இனி 5 நாள் மட்டுமே பணி; முதல்வர் அதிரடி! title=

சிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். கோலே, மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்று அறிவி்த்துள்ளார்

சிக்கிம் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற நிலைபாடு உள்ளது. இதனை 5 நாட்கள் என குறைக்கப்படும் என்ற தங்களது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தார் கோலே. முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இதன் முலம் அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இதை அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தானும் மற்ற அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் இனி பார்ச்சுனர் எஸ்யுவி சொகுசு கார்களுக்குப் பதிலாக ஸ்கார்ப்பியோ கார்களையே பயன்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவி்த்தார்.

17-வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. இத்தேர்தலில் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சிக்கு சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா கட்சி முடிவு கட்டியுள்ளது.

சிக்கிம் தேர்தலை பொறுத்தவரையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார். ஆனால், பவன்குமாரின் கட்சி 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. 

சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று பவன் குமார் சம்லிங்கின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனையடுத்து இம்மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்று அழைக்கப்படும் பி.எஸ். கோலே நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதும் இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News