அடங்க மறுத்த திருமா! சிதம்பரத்தில் வெற்றி வாகைசூடிய திருமாவளவன்!!

தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 24, 2019, 07:41 AM IST
அடங்க மறுத்த திருமா! சிதம்பரத்தில் வெற்றி வாகைசூடிய திருமாவளவன்!! title=

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிட்டார். இந்த போட்டியில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்படும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியில் முதலில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலை பெற்றார். இப்படி மாறி மாறி இரண்டு பெரும் முன்னிலை பெற்று வந்ததால், யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவியது. இந்த எதிர்பாப்பு நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.  

இறுதியாக சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. அவர் 5,00229 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97010 வாக்குகளும் பெற்றனர் இறுதியில் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Trending News