டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது லேசான மனதுடன், ஜனதா தளம் (யுனைடெட்) தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்களன்று வரவிருக்கும் டெல்லி தேர்தலில் 'அன்போடு' வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் பிர்பரவரி 8-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., பெரிய அதிர்ச்சிகள் சிறிய அளவுகளில் கொடுக்கப்பட வேண்டும், இதனால் சகோதரத்துவமும் ஒற்றுமையும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கும் ஆபத்தில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கிஷோரின் ட்வீட்டை ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு விடையிறுப்பாகக் காணலாம், அதில் டெல்லி தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அவர் மக்களை அழைத்தார், மேலும் டெல்லியில் ஷாஹீன் பாக் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கு பாஜக-விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோரின் பதிவு வெளியாகியுள்ளது.
8 फ़रवरी को दिल्ली में EVM का बटन तो प्यार से ही दबेगा। ज़ोर का झटका धीरे से लगना चाहिए ताकि आपसी भाईचारा और सौहार्द ख़तरे में ना पड़े।
Justice, Liberty, Equality & Fraternity
— Prashant Kishor (@PrashantKishor) January 27, 2020
முன்னதாக., குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக ஆளும் பாஜகவை JDU துணைத் தலைவர் விமர்சித்துள்ளார், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரிக்கும் தனது சொந்த கட்சியின் நடவடிக்கையை எதிர்த்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, கிஷோர் பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல், "குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு நாட்டில் தங்களுக்கு சாதகமாக ஒரு மனநிலையை உருவாக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அனைத்தும் தெளிவாகிவிடும்" என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக., குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவரை குறிவைத்து அமித்ஷா., "பாஜக மக்கள் 'பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப்படுவதாக கெஜ்ரிவால்ஜி கூறுகிறார். டெல்லியின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பிரிவினைக்குப் பின் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது உங்கள் நிலைப்பாடு என்றால், அது வெட்கக்கேடானது. அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். மிகுந்த துன்பத்தில் இருக்கும் இந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பிரதமர் மோடி விரும்புகிறார். நாங்கள் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டாமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் "துக்தே-துக்தே(மிகச்சிறிய துகல்கள்)" கும்பலுக்கு ஆதரவளிப்பதாக உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். "இந்தியாவில் பிளவு அரசியலைச் செய்யும் இந்த 'துக்தே-துக்தே' கும்பல் என்னைக் கேள்வி கேட்கிறது. இந்திய விரோத முழக்கத்தை ஆதரிக்கும் எவரும் அதன் ஒரு பகுதியாகும். ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் அதன் ஒரு பகுதியாகும்" என்று அவர் சாடினார்.
மேலும்., "கல்வியை உங்கள் அழுக்கு அரசியலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டாம். தயவுசெய்து நேரத்தை எடுத்துக் கொண்டு என்னுடன் அரசுப் பள்ளிகளைப் பார்வையிட வாருங்கள். நீங்கள் நாள் முழுவதும் எதிர்மறையால் சூழப்பட்டிருக்கிறீர்கள், நம் மாணவர்களைச் சந்தியுங்கள், உங்களுக்கு சில நேர்மறை கிடைக்கும். கல்வியில் நேர்மறையான அரசியல் செய்யுங்கள் ," என்றும் ஷா கெஜ்ரிவால் அரசை சாடினார்.