ஜம்மு-காஷ்மீரில் BDC தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...

ஜம்மு-காஷ்மீரில் 310 தொகுதிகளில் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் (BDC) தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. 

Last Updated : Oct 24, 2019, 12:59 PM IST
ஜம்மு-காஷ்மீரில் BDC தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... title=

ஜம்மு-காஷ்மீரில் 310 தொகுதிகளில் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் (BDC) தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. 

ஆகஸ்ட் மாதம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் (BDC) தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடைபெறுகின்றன.

இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்பில், 310 தொகுதிகளில் 1,065 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குகளின் எண்ணிக்கையும் இன்றைய தினம் பிற்பகுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BDC தேர்தலை காங்கிரஸ், தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) புறக்கணிக்கின்றன.

குறித்த இந்த தேர்தலில், குப்வாரா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான 101 வேட்பாளர்கள் (101 வேட்பாளர்கள்) வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், இவர்களை தொடர்ந்து அருகிலுள்ள பாரமுல்லா (90), ஜம்மு (82), ராஜோரி (76), தோடா (74), கத்துவா (72) உதம்பூர் மற்றும் புட்கம் (58), அனந்த்நாக் (55) , கிஷ்த்வார் (44), ராம்பன் (43), ரியாசி (39 வேட்பாளர்களை) களமிறங்கியுள்ளது..

லே மற்றும் கார்கில் மாவட்டங்கள் முறையே 36 மற்றும் 38 வேட்பாளர்களைக் கொண்டிருக்கின்றன. தெற்கு காஷ்மீரில் ஷோபியன் மாவட்டத்தில் நான்கு வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தத்தில் 26,629 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 8,313 பெண்கள் மற்றும் 18,316 ஆண்கள் மொத்தம் 316 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் 22 மாவட்டங்களில், தேர்தல் ரகசிய வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெறும் என்பதால் வாக்குப்பெட்டிகள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News