வெளியானது YSR-ன் வாழ்க்கை படமான 'யாத்ரா'-வின் FirstLook!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் YSR-ன் வாழ்கை படமான 'யாத்ரா'-வின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!

Last Updated : Apr 7, 2018, 06:59 PM IST
வெளியானது YSR-ன் வாழ்க்கை படமான 'யாத்ரா'-வின் FirstLook! title=

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் YSR-ன் வாழ்கை படமான 'யாத்ரா'-வின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!

ஆந்திர முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த YSR என்று அழைக்கப்படும் YS ராஜசேகரரெட்டி அவர்களின் வாழ்க்கையினை சரித்திர படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் Firstlook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இத்திரப்படத்தில் YSR வேடத்தில் மளையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும், YSR-ன் மனைவி விஜயம்மாவாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளனர். 

இந்தப் படத்தை இயக்குனர் மகிராகவ் என்பவர் இயக்குகிறார். 'யாத்ரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை 70MM என்டர்டெயின்மன்ட்ஸ் தயாரிக்கிறது. வரும் ஏப்ரல் 9ஆம் நாள் முதல் படத்தின் படபிடிப்புக்கள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலுங்கு மொழியில் உறுவாகும் இப்படமானது பின்னர் தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான YSR அவர்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் இத்திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்கப்படுகிறது!

Trending News