சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் AB de வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்! 

Last Updated : May 24, 2018, 01:08 PM IST
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் AB de வில்லியர்ஸ்!   title=

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்! 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், தன் கிரிக்கெட் பயணம் தொடங்கிய டக்ஸ் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தன் ஓய்வு முடிவு பற்றிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிடிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், `114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடிவிட்டேன். இது மற்றவர்களுக்கு வழிவிட்டு நிற்க வேண்டிய நேரம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் களைப்படைந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவு. நீண்ட நாள்களாக யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். ஓரளவு சிறப்பாக ஆடும்போதே ஓய்வுபெற முடிவு செய்துவிட்டேன். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான அருமையான தொடர்களுக்குப் பிறகு, ஓய்வு பெறுவது நல்லது என்று தோன்றியது. எங்கு, எப்போது, எந்த ஃபார்மட்டில் விளையாடுவது என்று யோசிப்பது என்னைப் பொறுத்தவரை தவறு. ஒன்று தென்னாப்பிரிக்க அணிக்காக எல்லா போட்டிகளிலும் ஆட வேண்டும். இல்லையேல் ஆடாமல் இருப்பதே நல்லது. 

என்னோடு விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்க ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது இன்னொரு இடத்தில் பணம் சம்பாதிப்பதைப் பற்றி அல்ல. மொத்தத்தையும் கிரிக்கெட்டுக்குக் கொடுத்துவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு வெளியேறுவதுதான். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி. 

என் மீது அன்பு செலுத்தியதற்காகவும் என்னைப் புரிந்து கொண்டதற்காகவும். வெளிநாடுகளில் தொடர்ந்து விளையாட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், டைட்டன் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முயற்சி செய்வேன். டுப்ளெஸ்ஸிக்கும் அவரின் அணி வீரர்களுக்கும் என் ஆதரவு எப்போதும் உண்டு" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

Trending News