கோடைகாலத்தில் இறைவநாளும், தேவதைகலாலும் கூட வெயிலை தாங்க முடியாமல் சூடாக உணர்கின்றன என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் கோடை வெயிலின் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கோடை வெப்பத்திற்கு பயந்து மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச கான்பூரில் உள்ள விநாயகர் கோயில் ஒன்றில் விநாயகருக்கு கூலர் வைத்துள்ளனர். இந்த செயலை கோயில் நிர்வாகத்தினரே செய்துள்ளனர்.
இதுபற்றி கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்...!
இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறைவனுக்கு ஏதாவது செயுங்கள் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு நாங்கள் கோயில் கருவறையில் உள்ள இறைவனுக்கு கூலரை பொருத்தி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளனர்.
Coolers and ACs installed inside temples in Kanpur as temperature goes higher in the region. The care takers & priests of the temple say, 'Devotees approached us & said that 'Gods' too feel hot like us so something must be done for them.' pic.twitter.com/Kpkwo1U5Bg
— ANI UP (@ANINewsUP) May 7, 2018