மார்பக புற்றுநோய் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை "டிப்ஸ்"

மார்பக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம். 

Last Updated : Mar 28, 2018, 06:06 PM IST
மார்பக புற்றுநோய் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை "டிப்ஸ்"  title=

இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது. 

புற்றுநோய் சில அறிகுறிகள்:

மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்.

மார்பகம் பகுதி தடித்து இருக்கும். 

மார்பகக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும்.

புற்றுநோயை தடுக்க எளிய முறைகள்:

புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. 

மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

Trending News