காபியின் ஆரோக்கிய நன்மைகள்!!

Last Updated : Aug 20, 2017, 02:01 PM IST
காபியின் ஆரோக்கிய நன்மைகள்!! title=

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கும் காபி இருந்தாக வேண்டும். காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? 

காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும். 

காபியின் மருத்துவ நன்மைகள்:-

> ஆற்றல் திறன்

காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும். அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.

> ஈரலை பாதுகாக்கும்

உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.

> மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் 

காபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

> வாதத்தை தடுக்கும்

இதய வாதம் போன்ற சில இதய பிரச்சனைகளை தடுக்க காபி உதவுகிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் கூட ஒன்றாகும்.

> புற்றுநோயைத் தடுக்கும் 

புற்றுநோய்க்கான இடர்பாட்டையும் காபி குறைக்கும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

Trending News