காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான முதல் உணவாகும், ஏனெனில் இந்த உணவானது இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த நீண்ட இடைவெளியை முறித்து, அன்றைய தினத்தைத் தொடங்குவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகிறது.
அதன்படி நீங்கள் உண்ணும் காலை உணவு உங்களுக்கு அதிக சக்தியையும் உடல் வலிமையும் தருவதாக இருந்தால் அதுவே சத்தான உணவாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும்.
குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு
பொதுவாக குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் நம் உடலி தாக்கும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் குளிர்காலங்களில் நம் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக உண்ணும் உணவில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். அந்த வகையில் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய சில சத்தான காலை உணவுகளை பற்றி காண்போம்.
மேலும் படிக்க | நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி
ரவை உப்மா
பொதுவாக உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவை உப்மா. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். எனவே அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு இல்லாத பண்புகள் காரணமாக, ரவை உங்கள் அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
வேகவைத்த கொண்டைக்கடலை
குளிர்காலத்தில், காலை உணவாக வேகவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால், உடலுக்கு புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
காலை உணவுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு
வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
காலை உணவாக தோசை
நம்மில் பலருக்கும் காலை உணவாக தோசை சாப்பிட தான் பிடிக்கும். உடற்சக்திக்கு நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது. தோசையில் இது கிடைக்கிறது. அதேபோல் தோசையில் இருந்து நமக்கு மினரல்ஸ் மற்றும் வைட்டமின்களும் கூட சிறிதளவு கிடைக்கிறது.
காலை உணவுக்கு இரண்டு முட்டைகள்
முட்டை புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். காலை உணவில் இரண்டு முட்டையில் செய்யப்பட்ட ஆம்லெட்டை சாப்பிட்டாலோ அல்லது முட்டையை வேகவைத்து உட்கொண்டாலோ, நாள் முழுவதும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
ராகி ரொட்டி
ராகி மற்ற தானியங்களை போலவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதட்டம் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும். எனவே காலை உணவுக்கு ராக்கி ரொட்டி சிறந்த தேர்வாகும்.
கோபி பரோட்டா
பலராலும் பெரிதும் விரும்பப்படாத காலிபிளவரில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ