இலவங்கப்பட்டையின் இதமான நன்மைகள்: குளிர்காலத்தில் உங்கள் கவசமாய் உதவும்

Amazing Benefits of Cinnamon: இலவங்கப்பட்டை வாதம் மற்றும் கபத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, இந்த இரண்டாலும் ஏற்படும் நோய்களை இலவங்கப்பட்டை சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 06:25 PM IST
  • ஆயுர்வேதத்தின் படி, இலவங்கப்பட்டை மிகவும் சூடான மசாலா ஆகும்.
  • இது வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
  • இருப்பினும், அதை அதிகமாக எடுத்துக்கொண்டால், அது பித்த தோஷத்தை அதிகரிக்கும்.
இலவங்கப்பட்டையின் இதமான நன்மைகள்: குளிர்காலத்தில் உங்கள் கவசமாய் உதவும் title=

இலவங்கப்பட்டையின் ஆரோக்கிய நன்மைகள்: இலவங்கப்பட்டை ஒரு சிறந்த ஆண்டி ஆக்சிடெண்ட் ஆகும். நாம் நமது சமையலறையில் பயன்படுத்தும் மசாலாக்களில், கிராம்பில் அதிக ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. அதன் பிறகு, இலவங்கப்பட்டையில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதியுடன், அலோபதியிலும் லவங்கத்தின் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இலவங்கப்பட்டை மசாலா ஒரு மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதன் மரங்கள் மிகவும் உயரமாகவும் பெரியதாகவும் இருக்கும். இந்த மரங்களின் தண்டுகளின் உள் பட்டை இலவங்கப்பட்டையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள் மூலிகைகளாகவும் பயன்படுகிறது. மேலும் அவற்றில் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தின் படி, இலவங்கப்பட்டை மிகவும் சூடான மசாலா ஆகும். இது வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இருப்பினும், அதை அதிகமாக எடுத்துக்கொண்டால், அது பித்த தோஷத்தை அதிகரிக்கும். ஆகையால், இதை சரியான அளவில் உட்கொள்வது மிக அவசியமாகும். 

இலவங்கப்பட்டையின் நன்மைகள்

குறிப்பிட்டுள்ளபடி, இலவங்கப்பட்டை வாதம் மற்றும் கபத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, இந்த இரண்டாலும் ஏற்படும் நோய்களை இலவங்கப்பட்டை சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இது தவிர இந்த நோய்களில் இலவங்கப்பட்டை குறிப்பாக நன்மை பயக்கும்.

- செரிமான பிரச்சினைகள்
- கொலஸ்ட்ரால் பிரச்சனை
- இரத்த அழுத்த பிரச்சனை
- சர்க்கரை நோய்
- மாதவிடாய் பிரச்சனைகள்
- மனநல பிரச்சனைகள்
- சளி
- குளிர்
- காய்ச்சல்
- வைரஸ் தொற்று
- பூஞ்சை தொற்று

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! 

இலவங்கப்பட்டையை எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

- இலவங்கப்பட்டை மிகவும் சூடான மசாலா ஆகும். இதை அதிகமாக உட்கொண்டால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், தோலில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, இதை குறைந்த அளவில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

- ஒரு நபர் ஒரு நாளில் ஒரு அங்குல அளவு இலவங்கப்பட்டையை உட்கொள்ளலாம். நீங்கள் இலவங்கப்பட்டை தூளைப் பயன்படுத்தினால், நாள் முழுவதும் ஒரு சாதாரண அளவிலான டீஸ்பூன் பயன்படுத்தவும். 

இலவங்கப்பட்டையை எவ்வாறு பயன்படுத்துவது?

- பருப்பு மற்றும் காய்கறிகள் செய்யும்போது இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம்.

- இலவங்கப்பட்டையை டீ அல்லது டிகாக்ஷநில் சேர்த்து குடிக்கலாம்.

- பாலுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

- ஒரு சிறிய இலவங்கப்பட்டையை வாயில் போட்டு மிட்டாய் போல் உறிஞ்சலாம்.

இருமல் இருந்தால் இலவங்கப்பட்டை எவ்வாறு பயன்படுகிறது? 

- குளிர்காலத்தில், தொண்டை புண், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனைகள் மிக விரைவாக ஏற்படுகின்றன. ஏனெனில் குளிர்ந்த காற்று உடல் வெப்பநிலையை விரைவாகக் குறைக்கிறது. இதனால் வைரஸ் தொற்று அதிகமாகின்றது. இந்த சூழ்நிலையில், இலவங்கப்பட்டை பயன்படுத்தலாம்.

- ஒரு டீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் (1/4) இலவங்கப்பட்டை பொடியை கலக்கவும். இந்த கலவையை விரலால் நக்கி மெதுவாக சாப்பிடவும். காலை உணவுக்குப் பிறகும், இரவில் தூங்குவதற்கு முன்பும் இதை உட்கொள்ளுங்கள். விரைவில் பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரையை விட தேன் சிறந்ததா? ஏன் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News